Super User / 2012 மார்ச் 06 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா, ரி.லோஹித்)
கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர் காயப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் கருவல் தம்பி செல்லம்மா என்றழைக்கப்படும் 58 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயப்பட்டுள்ளார்.
காயப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .