2026 மே 09, சனிக்கிழமை

dd

சட்டவிரோத மணல் அகழ்வில் தொடர்புடைய சந்தேகத்தில் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2012 மார்ச் 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 4 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன்,  சந்தேக நபர்கள் 4 பேரையும் வாழைச்சேனைப் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

ஜெயந்தியா பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எம்.காமினி தென்னக்கோனுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.காலிதீன் தலைமையில் சென்ற குழவினரே உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியதுடன்,  சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் இச்சந்தேக நபர்களை நாளை  வியாழக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில்; ஆஜர்படுத்தவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .