Menaka Mookandi / 2012 மார்ச் 08 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ரி.லோஹித்)
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்;ட பெண் முயற்சியாளர்களுக்கு பொருளாதார வளங்களை ஏற்படுத்துவதற்காக நிதி நிறுவனங்களுடனான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
சர்வதேச தொழில் நிறுவனம், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம். காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஆகியவைகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் காவியா சுயதொழில் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பெண்கள் அமைப்பின் தலைவியுமான திருமதி அஜித்குமார் யோகமலர் உட்பட வங்கிளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பெண்களுக்கான சுய தொழில் முயற்சிக்கான வழிகாட்டுதல்களை மேற்கொள்ள நிதி நிறுவனங்களுக்கும் இவர்களுக்கு மிடையில் தொடர்பினை எற்படுத்தி ஒரு இணைப்பையும் ஏற்படுத்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .