Menaka Mookandi / 2012 மார்ச் 08 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
இன்று அதிகாலை மரணமடைந்த கிழக்கின் மனித நேயப்பணியாளரும் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் முன்னாள் இயக்குனரும், மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் தற்போதய நிதிப் பொறுப்பாளருமான அருட் தந்தை கலாநிதி சிறிதரன் சில்வஸ்ட்டரின் பூதவுடல் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, தாண்டவன்வெளியிலுள்ள அவரது உறவினர் இல்லத்தில் அவரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. இவரின் பூதவுடலுக்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 5மணிக்கு அவரின் பூதவுடல் மட்டக்களப்பு சிலோம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
நாளை மட்டக்களப்பிலுள்ள எஹெட் அலுவலகத்திலும் பின்னர் புனித மிக்கேல் கல்லூரியிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் புனித மரியாழ் தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இவரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வாழைச்சேனையில் வைத்து மாரடைப்பால் அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .