Suganthini Ratnam / 2012 மார்ச் 09 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள மாவிலங்கத்துறை ஸ்ரீமதுராபுரம் கிராமத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நிர்மாணிக்கப்பட்ட தாய், சேய் நிலையக்கட்டிடம் பாவிக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலுள்ளது.
இத்தாய், சேய் நிலையக்கட்டிடம் மண்முனை, மாவிலங்கத்துறை, ஒல்லிக்குளம் போன்ற கிராம மக்களுக்காக 2008ஆம் ஆண்டு கமநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
இக்கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தாய், சேய் சுகாதார நடவடிக்கைகளுக்காக பல மைல் தூரம் நடந்து தாழங்குடாவுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே இக்கட்டிடம் இங்கு அமைக்கப்பட்டது. எனினும், இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இக்கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கிறிஸ்டினா சசிகரனிடம் கேட்டபோது, இக்கட்டிடம் மண்முனைப்பற்று பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு மண்முனைப்பற்று சுகாதார அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இக்கட்டிடத்திற்கு மின்சார, தண்ணீர் வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் தான் இக்கட்டிடம் திறக்கப்படாமலுள்ளது. இந்த வசதிகளை ஏற்படுத்த நாம் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோமென அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .