Menaka Mookandi / 2012 மார்ச் 09 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூலம் திவிநெகும திட்டத்தின் கீழ் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் செயற்றிட்டத்தின் கீழ் ஒரு தொகுதி மகளிருக்கான கடன் திட்டங்கள் நேற்று வியாழக்கிழமை பகல் வழங்கப்பட்டன.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் சந்தானம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சின் இணைப்புச் செயலாளருமான திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன் கலந்துகொண்டார்.
அத்துடன் பிரதேச அபிவிருத்தி வங்கியின்; தலைவர் திருமதி கேசலா ஜயவர்த்தன, வங்கியின் பொது முகாமையாளர் ரட்னசிறி சிறிவர்த்தன, பிராந்திய முகாமையாளர் சந்தானம் உட்பட வங்கியின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதன் மூலமாக அவர்களை சமூதாயத்தில் வலுவடையச்செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பல்வேறு வழிகளிலும் தமது வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களில் சிறப்புற்றுவரும் மகளிர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .