Menaka Mookandi / 2012 மார்ச் 09 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
உட்கட்டமைப்பு மீள்நிர்மாணத்தினூடாக முரண்பாடு தவிர்ப்பு எனும் தொனிப்பொருளில் இலங்கை கட்டட நிர்மாண கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை இப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான கலந்துரையாடல், கருத்தாடல் ஒன்று மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், மீள்நிர்மாணத்துறையின் ஊடாக சமாதானத்தினை ஏற்படுத்துதல், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய இராட்சியத்தின் சல்பேர் பல்கலைக்கழக கலாநிதி றிச்சட் கேய்க் மற்றுமு; மேனகா தயாபரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
அத்துடன், அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான மீள்கட்டுமானம், மீள்குடியேற்றத்துடனான மீள் நல்லிணக்கம் என்பது பற்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையைச் சேர்ந்த விரிவரையாளர் ஜீ.விக்னேஸ்வரன் உரை நிகழ்த்தினார்.
மீள்கட்டுமாணத்துறை முரண்பாடு தவிர்ப்பு செயற்திட்டம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைகழகம், ஐக்கிய இராச்சியத்தின் சல்பேர்ட் பலகலைக்கழகம் என்பனவற்றுடன் இணைந்து இலங்கை கட்டட நிர்மாண கைத்தொழில் சம்மேளனம் மேற்கொண்டுவரும் ஆய்வு தொடர்பான விடயங்களும் இதன் போது பகிரப்பட்டதுடன், கலந்து கொண்டவர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன.
இக்கலந்துரையாடலில், இலங்கை கட்டட நிர்மாண கைத்தொழில் சம்மேளனத்தின் சிரேஸ்ட ஆலோசகர் டசித்த தல்கொடபிட்டிய, ஐக்கிய இராச்சியத்தின் சல்பேர்ட் பலகலைக்கழக பேராசிரியர் டிலாந்தி அமரதுங்க, மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் நவரூப ரஞ்சினி ஆகியோரும் கலந்து கொண்டு தமது விளக்கங்களை முன்வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித மூரத்தி, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், இலங்ஙகை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வசந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் கமலதாஸ், கட்டட ஒப்பந்தகாரர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கருத்துக்களை முன்வைத்தனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .