2026 மே 09, சனிக்கிழமை

தென்னிலங்கை இளைஞர், யுவதிகளின் பரிமாற்ற நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 10 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

'கிராமத்துக்கு கிராமம் இதயத்துக்கு இதயம் இளைஞர் பரிமாற்ற முகாம்' என்னும் தொனிப்பொருளில் தென்னிலங்கை இளைஞர், யுவதிகளின் நான்கு நாள் பரிமாற்ற ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வவுனதீவில் ஆரம்பமாகியுள்ளது.

வவுனதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விலாவட்டவானில் சர்வோதயம் அமைப்பினால் இந்த உறவுப்பால இளைஞர் பரிமாற்ற முகாம் நடத்தப்பட்டது. பதுளை ,அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து மூவினங்களையும் சேர்ந்த சுமார் 150 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

சர்வோதயம் அமைப்பின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் ஈ.எல்.ஏ.கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .