2026 மே 06, புதன்கிழமை

கொலைச் சந்தேக நபர் மரணம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 10 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில்; கடந்த 22ஆம் திகதி கத்தியால் வயோதிபர் ஒருவரை குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் இன்று சனிக்கிழமை அதிகாலை  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றப்பபுலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.என்ரகீம் தெரிவித்தார்.
 
இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகுப்பிள்ளை இராஜேந்திரன்( வயது 44) என்பவரே மரணமானவர் ஆவார்.

புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63) என்பவரின் கொலை தொடர்பில் கைதான நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சின்னத்தம்பி இளையதம்பியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முச்சக்கரவண்டி  சாரதி ஒருவர் உட்பட நான்கு பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இக்கொலையுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஐந்தாவது சந்தேக நபர் தொடர்ந்து  தேடப்பட்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் மட்டக்களப்பு மாவட்ட குற்றப்பபுலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .