2026 மே 06, புதன்கிழமை

புதுக்குடியிருப்பு கொலை தொடர்பில் மூவர் கைது

Super User   / 2012 மார்ச் 11 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய புலனாய்வு  உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு பேர் தேற்றாத்தீவை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த 45 வயதான மகேந்திரன் என்பவர் நேற்று மாலை அடித்து கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .