2026 மே 07, வியாழக்கிழமை

கல்லடி வாவியில் இறால் பிடிப்பதற்கு அதிகளவு மீனவர்கள் ஆர்வம்

Super User   / 2012 மார்ச் 11 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, கல்லடி வாவியில் இறால் பிடிப்பதில் அதிகளவு மீனவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். முன்பு இரவு நேரங்களில் இறால் பிடிப்பதற்காக வாவிக்கும் செல்லும் மீனவர்கள்இ தற்போது பகல் வேளைகளிலும் இறால் பிடிப்பதற்காக வாவிக்கு செல்கின்றனர்.

கல்லடியிலுள்ள வாவியில் நேற்று சனிக்கிழமை கூடுதலான தோணிகளில் மீனவர்கள் இறால் பிடிப்பதில் ஈடுபட்டனர். வாவியில் பிடிக்கப்பட்ட இறால்கள் குறித்த இடத்திலேயே மொத்தமகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னர் ஒரு கிலோ 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இறால்இ தற்போது 250 ரூபாவுக்கு விற்பனை செயய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • raj Wednesday, 14 March 2012 04:50 AM

    இது வழமயா நடக்கும் விடயம். சுக்ரி இறால் வாங்க போனதாக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .