2026 மே 06, புதன்கிழமை

தொலைபேசி மூலம் குடும்ப பெண்ணை தொந்தரவுபடுத்திய பேஷ் இமாமுக்கு அபராதம்

Super User   / 2012 மார்ச் 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.ஏ.ஹூஸைன் )

ஓட்டமாவடியைச் சேர்ந்த குடும்ப பெண்ணொருவரை ஒப்புக் கொண்ட பள்ளிவாசலொன்றில் பேஷ் இமாமாக கடமையாற்றுபவருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஓட்டமாவடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடிய இணக்க சபை, குற்றவாளியாகா காணப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த பேஷ் இமாம் கடமையாற்றும் ஒருவருக்கே இந்த தீர்ப்பை வழங்கியது.

குறித்த பெண்ணை அநாமதேயமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆபாச  வார்த்தைகளை பேசி அவரை மனோ ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கிலேசம் அடைய செய்ததை குறித்த நபர் ஒப்புக்கொண்டதை அடுத்து பாதிக்கப்பட்டவரின் கோரிக்கைக்கு இணங்க 50,000 ரூபா நஷ்டஈடாக செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த நபர் கடந்த 2011 ஜூன் மாதத்திலிருந்து இந்த பெண்ணை முகம் தெரியாத நிலையில் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொல்லைப்படுத்தி வந்த ஆதாரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வந்ததன் மூலம் இக்குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டது.

இணக்க சபை மத்தியஸ்தர்களான மௌலவி யூ.ஏ.அப்துல் மஜீட், திருமதி உதுமாலெப்பை ஹபீலா மற்றும் ஏ. றாசிக் ஆகியோர் குற்றவாளிக்கு இந்த   தீர்ப்பை வழங்கி இவ்வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .