Suganthini Ratnam / 2012 மார்ச் 12 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கான விஜயத்தை நேற்று சனிக்கிழமை மேற்கொண்ட சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுவரும் அல் அஸ்கர் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆராதனை மண்டபம் மற்றும் அல் ஜிப்றியா வித்தியாலயத்திற்கான பாடசாலைகளின் கட்டிடப் பணிகளையும் நேரில்ச் சென்று பார்வையிட்டார்.
5 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட அல் ஜிப்றியா வித்தியாலயத்திற்கான மலசலகூடத்தினையும் வித்தியாலய அதிபரிடம் மாணவர்களின் நலனுக்காக அவர் கையளித்தார்.
அத்துடன், ஆற்றங்கரை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் கட்டிடப்பணிகள் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதி அமைச்சர், இக்கட்டிடப்பணிக்கு தனது பங்களிப்புத் தொடர்பிலும் கூறினார்.
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago