Menaka Mookandi / 2012 மார்ச் 12 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னாள் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வானும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி காயப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பாசிக்குடாவில் இருந்து திருகோணமலைக்கு செல்வதற்காக உல்லாசப் பிரயாணிகளை ஏற்றி வந்த வானும் வாழைச்சேனை பொலிஸ் நிலையச் சந்தியில் இருந்து வாழைச்சேனை பஸாரை நோக்கி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயப்பட்டவர் வாழைச்சேனையைச் சேர்ந்த அலியார் அப்துல் ஹமீட் (வயது 44) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்; காயப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago