Super User / 2012 மார்ச் 12 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புதிதாக தாதியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இதன் மூலம் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்திற்கிணங்கவே, மாகாண சுகாதார அமைச்சு இந்த புதிய நியமனங்களை வழங்க உள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
இதனால் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மிக விரைவில் தாதியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
16 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
45 minute ago