Super User / 2012 மார்ச் 12 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க, தாதியர் சேவையிலிருந்த ஓய்வு பெறவுள்ளவர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கல், இராணுவ தாதியர் சேவையிலுள்ளவர்களை இணைத்தல் மற்றும் இராணுவ தாதியர் சேவையில் ஒய்வு பெற உள்ளவர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கல் ஆகிய வழிமுறைகளில் மாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவுள்ளது என மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் அஜித் மென்டிஸும் கலந்துகொண்டிருந்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago