Kogilavani / 2012 மார்ச் 13 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு கல்லடி, திருச்செந்தூரில் புதிய மகப்பேற்று சிகிச்சை நிலையமொன்று நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கமநெகும திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் இந்த மகப்பேற்று சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மகப்பேற்று நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி ரஞ்சன் உட்பட பொறியியலாளர்கள், கிராமிய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த சிகிச்சை நிலையம் மூலம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருச்செந்தூர், கல்லடி, முகத்துவாரம், டச்பார், நாவலடி ஆகிய கிராமங்களைச்சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுத்தவேண்டுகோளின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 75 இலட்சம் ரூபா செலவில் இந்நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago