Suganthini Ratnam / 2012 மார்ச் 13 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ரி.லோஹித்;)
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான வழிகாட்டல் கைநூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு நெக்டப் மகளிர் கடைத்தொகுதி கட்டிட மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான வழிகாட்டல் கைநூலை தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எல்.திரிமவிதாரண வெளியிட்டு வைத்தார்.
சிறு முயற்சியாளர்கள் கடன்களை வங்கிகளில் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள், பிரச்சினைகள் குறித்து வங்கிப் பிரதிநிதிகளுடன் நேரடியாக தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழிலாளர்கள் கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.தங்கேஸ்வரி, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எல்.திரிமவிதாரண, மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருமான செல்வேந்திரன், சம்மேளனத்தின் செயலாளர், முகாமையாளர் கே.குகதாசன், காவியா பெண்கள் அமைப்பின் தலைவியும் சம்மேளனத்தின் பொருளாளருமான யோகமலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், வங்கிகளின் முகாமையாளர்கள், பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்;தர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக பெண் முயற்சியாண்மையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago