2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும சந்தையை இரு நாட்கள் நடத்த தீர்மானம்

Kogilavani   / 2012 மார்ச் 14 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மவாட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதிக்கும் 11ம் திகதிக்குமிடையில் திவிநெகும புதுவருட சந்தையை இரண்டு நாட்கள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் சமுர்த்தி அதிகார சபை, சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களம் என்பன இணைந்து இந்த சந்தையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 16 திவிநெகும புதுவருட சந்தைகள் நடாத்தப்படவுள்ளன.

இந்த புதுவருட சந்தையில் திவிநெகும உற்பத்திப் பொருட்கள், மற்றும் சமுர்த்தி வங்கி சங்கங்களின் மூலம் கடன் பெறப்;பட்டு செய்யப்பட்ட உற்பத்திப்பொருட்கள் சமுர்த்தி உதவிகள் மூலம் செய்யப்பட்ட உற்பத்திப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

புதுவருட கொள்வனவை மக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த திவிநெகும சந்தை நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .