2026 மே 06, புதன்கிழமை

மட்பாண்ட உற்பத்திகளை விற்பனை செய்வதில் மட்டு. செய்கையாளர்கள் அவதி

Menaka Mookandi   / 2012 மார்ச் 14 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மட்பாண்ட பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்க்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

களிமண்ணைக்கொண்டு தயாரிக்கின்ற சட்டி, பானை, குடங்கள் உட்பட பல்வேறு பாவனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பின்மையால் பல்வேறு கஷ்டங்களை எதிர்க்கொண்டு வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, களுவாஞ்சிக்குடி, வாகரை, ஆரையம்பதி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .