2026 மே 07, வியாழக்கிழமை

'இரவுகளை மீட்டெப்போம்' எனும் தொனிப்பொருளில் பெண்களின் ஊர்வலம்

Kogilavani   / 2012 மார்ச் 15 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, லோஹித்)

'இரவுகளை மீட்டெடுப்போம்' எனும் தொனிப்பொருளிலான பெண்களின் ஊர்வலமொன்று நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

'கிராமப்பெண்களை வலுப்படுத்துவோம், பசி மற்றும் வறுமையினை ஒழிப்போம்' என்னும் தலைப்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு சென்.செபஸ்டியன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றன.

இதன் ஒருக்கட்டமாக இரவுகளை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளிலான இவ்வூர்வலம் இடம்பெற்றது.

இவ்வூர்வலத்தில், தாண்டியடி, தாழங்குடா, திருச்செந்தூர், நொச்சிமுனை ஆகிய கிராமங்களிலிருந்து 300 இற்கும் மேற்பட்ட பெண்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இவ் ஊர்வலம் புனித செபஸ்த்தியான் கிறிஸ்தவ ஆலய முன்றலில் ஆரம்பமாகி மட்டக்களப்பு தாண்டவன் வெளிவரை நடைபெற்றது.

இதன்போது, பெண்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சூரியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் முகாமையாளர் சரளா இமானுவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியையுமான திருமதி மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .