Kogilavani / 2012 மார்ச் 15 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான வலுவூட்டல் மற்றும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டுள்ள காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா அமெரிக்காவிலுள்ள நெவியோ றெனோ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களை நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கையில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை வலுப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.
இந்தியா, ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், துருக்கி, உட்பட பல நாடுகளை சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இச்செயலமர்வில் கலந்து கொண்டதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago