2026 மே 06, புதன்கிழமை

முறக்கொட்டான்சேனை சந்தை பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

யுத்த காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை சந்தை மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு நேற்று ஞர்யிற்றுக்கிழமை பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் எஸ்.உதயஜீவதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு சந்தையினை திறந்து வைத்து பொது மக்களின் பாவனைக்காக கையளித்தார்.

அத்துடன், மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேசசபை உறுப்பினர்களான ஆ.சிவநேசதுரை, நடராசலிங்கம், நடராசா மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாமான முறக்கொட்டாஞ்சேனை முகாம் அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் பாடசாலைக் கட்டடங்கள், சந்தை என பலவும் உள்வாங்கப்பட்டிருந்தன.

யுத்தம் நிறைவு பெற்றபின்னர் சந்தைக்கட்டடடம் உள்ளிட்ட பல பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .