2026 மே 06, புதன்கிழமை

வாகரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக் கிளை திறப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


வாகரை பிரதேசத்தில் முதன்முறையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை திறக்கப்பட்டது. வாகரை, கதிரவெளி கிராமத்திலேயே இக்கிளை திறக்கப்பட்டுள்ளது.

வாகரை, புச்சாக்கேணி வாரச் சந்கைக் கட்டிடத்தில் இடம்பெற்ற இக்கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இக்கிளை அங்குரார்ப்பண நிகழ்வையடுத்து பல கிராம வாசிகள் சுதந்திர கட்சியில் இணைந்தனர். பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளின் மீது கொண்ட பற்றின் காரணமாகவே சுதந்திர கட்சியில் இணைந்துள்ளதாக கட்சியில் இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது, கட்சியில் இணைந்தவர்களுக்கு அங்கத்துவ அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .