2026 மே 09, சனிக்கிழமை

என்டஸ்கோப் சோதனை ஒத்திவைக்கப்பட்டமை குறித்து நோயாளிகள் கவலை

Super User   / 2012 மார்ச் 29 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை என்டஸ்கோப் (குடற் பரிசோதனை) பரிசோதனைக்கென அனுமதிக்கப்பட்டவர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது. இது குறித்து நோயாளிகள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

என்டஸ்கோப் (குடற் பரிசோதனைக்காக) ஏற்கனவே திகதியிடப்பட்டு செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதி பெற்று விடுதியில் இரவு முழுவதும் உணவின்றி தங்கியிருந்து இருந்து காலையில் சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட போது குறித்து பரிசோதனை அறை திறந்திருக்கவில்லை.
 
குறிப்பிட்ட அறைக்கு நேற்றைய தினம் பொறுப்பாக ஒதுக்கப்பட்ட தாதி உத்தியோகத்தர் குறித்த நேரத்திற்கு வேலைக்கு வராமையால் திறந்திருக்கவில்லை.  அதன் காரணமாக சோதனைக்காக வருகை தந்த மருத்துவ நிபுணர் நோயாளிகளுக்கான திகதியை அடுத்த வாரத்திற்கு பிற்போட்டுச் சென்றுள்ளார் எனத் தெரியவருகிறது.
 
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் வினவியபோது,

"குறிப்பிட்ட பரிசோதனைக்குரிய அறை தேவை ஏற்படும் வேளைகளில் மாத்திரம் திறக்கப்படுவது வழமை. கிளினிக் போன்ற நாட்களில் திறக்கப்படுவதுடன், குறிப்பிட்ட சில விடுதிகளே இதற்கு பொறுப்பானவர்கள்" என தெரிவித்தார்.
 
இது குறித்து வைத்தியசாலையின், தாதிய பரிபாலகியிடம் கேட்டதற்கு,

'"நேற்றைய தினம் என்டஸ்கோப் பரிசோதனை அறைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த தாதிய உத்தியோகத்தர் தவிர்க்க முடியாத காரணத்தினால் நேரம் தாமதித்து வந்தமையாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 
காலை 7 மணிக்கு வரவேண்டியிருந்த நிலையில் குறுகிய நேர விடுமுறையில் தாமதமாக 8. 30 மணிக்கு வருகை தந்திருந்தார்" என தெரிவித்தார்.
 
இச்சம்பவம் குறித்து கவலை வெளியிட்ட நோயாளிகள் சிலர்,  இவ்வாறு ஏற்கனவே நேரம் குறிப்பிடப்பட்டு சோதனைக்காக உணவு அருந்தாமல் முழுநாள் இருந்து சோதனைக்கு செல்கையில் இவ்வாறு நடைபெற்றுள்ளது. இவ்வாறான தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .