2026 மே 07, வியாழக்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து ஆசிரியை மரணம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆசிரியையொருவர் தண்ணீர் அள்ளும்போது கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான ஆசிரியையே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
தனது வீட்டுக்கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்தபோது இவர் கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்ததாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஏறாவூர் அல் ஜிப்ரியா வித்தியாலயத்தின் ஆசிரியையென்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .