2026 மே 09, சனிக்கிழமை

காத்தான்குடியில் ஆறு கொங்றீட் வீதிகளுக்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி பிரதேசத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆறு கொங்கிறீட் வீதிகளுக்கான வேலை திட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வீதிகளுக்கான ஆரம்ப வேலைகளை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர முதல் எஸ்.எச்.அஸ்பர் உட்பட நகர சபை உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடியிலுள்ள கலீபா அபூபக்கர் வீதி, 4ஆம் குறுக்கு வீதி, ஹிஸ்புல்லா விளையாட்டு மைதான வீதி, புதிய காத்தான்குடி கர்பலா வீதி, இராசா ஆலீம் விதி, அப்துல் ஜவாத் ஆலீம் வீதி ஆகிய வீதிகளுக்கான வேலைகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .