2026 மே 06, புதன்கிழமை

அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

Super User   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

அனுமதி பத்திரமின்றி ஒரு தொகை மாடுகளை இறைச்சிக்காக  கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இதன்போது, பசுக்கள் உட்பட 38 மாடுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.பி.ஏ.ஆர்.அமரசிங்க தெரிவித்தார்.  

மகாஓயா பிரதேசத்திலிருந்து ஏறாவூர் பிரதேசத்திற்கு இந்த மாடுகளை கொண்டுவந்த போதே இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாடுகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டமையால் மிருக வதைக்கான குற்றச்சாட்டும் இச்சந்தேகநபர்கள் மீது தெரிவிக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி பிரதேசத்தின் கறுத்த பாலம் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாரே குறித்த சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன் மாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • riswan Monday, 09 April 2012 08:40 PM

    இதெல்லாம் நடந்தது மாட்டுக்கு தெரியுமா ...?

    Reply : 0       0

    nawas Monday, 09 April 2012 09:25 PM

    மாட்டுக்கு உள்ள அறிவு கூட நம்ம ரிழ்வனுக்கு இல்லியா

    Reply : 0       0

    siriththiran Monday, 09 April 2012 11:54 PM

    நல்லவேளை டாக்டர் மேவின் சில்வா இவர்களை காணவில்லை .....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .