2026 மே 06, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

கஞ்சா வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும்  இருவரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்ததுடன், இவர்கள் பயணித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடமிருந்து 4 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறினர்.

விற்பனை செய்வதற்காக கஞ்சாவை எடுத்து வரப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து வாழைச்சேனை பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .