2026 மே 07, வியாழக்கிழமை

வந்தாறுமூலை தொழிற்பயிற்சி நிலையத்தை கிழக்கு முதல்வர் பார்வை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்தில் பல கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சி நிலையத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவிற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான புதிய தொழில்நுட்பங்களையும் பயிற்சிகளையும் வழங்கிவரும் மேற்படி தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது 10 வகையான இளைஞர் தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன..

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், முதலமைச்சரின் செயலாளர் எஸ்.அமலநாதன், முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜ், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் தே.வினோத், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒன்றிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் உள்ளிட்ட பலர் பலரும் இத்தொழிற்பயற்சி நிலையத்தை சென்று பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .