2026 மே 07, வியாழக்கிழமை

த.ம.வி.புலிகள் கட்சியின் மாவீரர் நினைவுதினம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

தமிழ் மக்கள் விடுதலைப்  புலிகள் கட்சியின் மாவீரர்கள் நினைவுதினம் நேற்று செவ்வாய்க்கிழமை  வெருகல் சிறுவர் பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்று மாலை 6.05 மணிக்கு முதலமைச்சரினாலும் கட்சியின் தலைவரினாலும் தீச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வெருகல் படுகொலைச் சம்பவத்தில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 210 பேர் படுகொலை செய்யப்பட்டதை  நினைவுபடுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி  மாவீரர்கள் நினைவுதினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள், மாவீரர் குடும்பங்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0

  • neethan Wednesday, 11 April 2012 03:23 PM

    கருணா அம்மான் கலந்து கொள்ளாத த.ம.வி.புலிகள் மாவீரர் நினைவு நாள் புரியவில்லை......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .