2026 மே 07, வியாழக்கிழமை

சமுர்த்தி நிவாரணம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

சமுர்த்திப் பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரணம் இம்மாதம் தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி ஆணையாளர் நாயகம் சித்திரா விக்ரமசிங்க சுற்றறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளார். 

சகல மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர்கள்; மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்திற்கமைய  சமுர்த்தி நிவாரண நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

900 ரூபா பெறுமதியான சமுர்த்தி நிவாரண முத்திரை பெற்ற குடும்பமொன்றிற்கு 1,200 ரூபா சமுர்த்தி நிவாரணப்பணம் வழங்கப்படவுள்ளது. 615 ரூபா, 525 ரூபா, 415 ரூபா, 375 ரூபா, 350 ரூபா, 250 ரூபா ஆகிய பெறுமதியான சமுர்த்தி முத்திரைகளை பெற்ற பயனாளிக் குடும்பங்களுக்கு சமமாக 750 ரூபா சமுர்த்தி நிவாரணப்பணம் அதிகரித்து வழங்கப்படவுள்ளன.
சமுர்த்தி திட்டத்தினூடாக மேம்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 210 ரூபா பெறுமதியான முத்திரை மீண்டும் 210 ரூபாவுக்கே  வழங்கப்படவுள்ளன.

இச்சமுர்த்தி நிவாரணப்பணம் சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்படவுள்ளன.

முன்னர் சமுர்த்தி நிவாரண முத்திரைகளுக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்களினூடாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.   இம்மாதம் தொடக்கம் இது மாற்றப்பட்டு சமுர்த்தி வங்கிகளினுடாக சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கு பணம் வழங்கப்படவுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளரும் உதவி ஆணயாளருமான பி.குணரெட்னம் தெரிவித்தார்.

  Comments - 0

  • neethan Wednesday, 11 April 2012 03:15 PM

    நந்தன புதுவருடத்தின் முன்னோடியாக சமுர்த்தி பயனாளிகளுக்கு கிடைக்கும் நல்ல செய்தி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .