2026 மே 07, வியாழக்கிழமை

ஈ.பி.ஆர்.எல்.எவ்.பின் இரு அணிகளும் ஏன் த.தே.கூட்டமைப்புடன் ஒன்றாக செயற்பட முடியாது: இரா துரைரெத்தினம

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

குறைந்தபட்சம் கிழக்கு மாகாணத்திலாவது  ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் பத்மநாபா அணியும்  சுரேஷ் அணியும் இணைந்து ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றுபட்டுச் செயற்பட முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கேள்வியெழுப்பினார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் பத்மநாபா அணி,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடனான கலந்துரையாடலின் முன்;னேற்றம் தொடர்பிலும் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக எமது கட்சியின் செயலாளர் சிறிதரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது தொடர்பில்  பல முயற்சிகளை முன்னெடுத்தபோது  நாடாளுமன்ற  உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இதற்கு ஆட்சேபனை தெரிவித்தது.

குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் இரு பிரிவுகளும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஆனால் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் உள்வாங்கினர். எமது கட்சி அதன்போது உள்வாங்கப்படவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக நான் முயற்;சி எடுத்தபோதிலும்,  சிலர் அதனை உதாசீனம் செய்தனர். எதிர்காலத்தில் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக நானும் பின்வாங்கினேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் இது தொடர்பாக கலந்துரையாடினேன்.

மீண்டும் கடந்த மாதம் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனை சந்தித்துப் பேசினேன். அதில் எதிர்காலத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை எட்டினோம். இருந்தும் இறுதி முடிவு எட்டப்பட்டிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து எமது கட்சி அமைப்பின் வெளிநாட்டு, உள்நாட்டு அமைப்பினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எமது கட்சி இணைவது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ். பின் பத்மநாபா அணி  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்வது அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றுசேர்வது தொடர்பாக முடிவு எடுத்து செயற்பட வேண்டும் என கோரியுள்ளேன்.

இந்த இரண்டு விடயங்களுக்கும் காரணம் கிழக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் ஓரணியில் செயல்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருக்கின்றமையோயாகும்.

இது தொடர்பாக கிழக்கில் உள்ள பல அமைப்புக்களும் மக்களும்  ஆலோசனையை நடத்திவருகின்றனர். இந்த மக்கள் இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைத்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு நிர்ப்;பந்திக்கின்றனர். அந்த வகையில் மக்களுக்காகவே  கட்சிகள.; கட்சிகளுக்காக மக்கள் இல்லை என்பது எனது கருத்தாகும்.

அத்துடன், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் கிழக்கு மாகாணத்திலாவது ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் இரு பிரிவுகளும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏன் ஒன்றுபட்டுச் செயற்பட முடியாது என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பான  கலந்துரையாடல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இக்கருத்தை பிரதேசவாதம் சார் கருத்தாக எவரும் கருத்திற்கொள்ளக்கூடாது. இது தொடர்பான முடிவுகள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .