2026 மே 07, வியாழக்கிழமை

தாய்சேய் நலன் காப்பகம் திறப்பு

Super User   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கமநெகும திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட தாய்சேய் நலன் காப்பகம் இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி, மாஞ்சோலை பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டது.

மீறாவோடை வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஸ்ஹர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கமநெகும திட்டத்தில்  20 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த தாய்சேய் நலன் காப்பக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .