2026 மே 09, சனிக்கிழமை

இளைஞர்வள நிலையத் திறப்பு விழாவும் சைக்கிள் விநியோகமும்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இளைஞர்வள நிலையத் திறப்பு விழாவும் சைக்கிள்கள்  விநியோகமும் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள  காவத்தமுனையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூகசேவைகள் அமைச்சின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இளைஞர்வள நிலையக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டத்தில் 20 பேருக்கு சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

சனசமூக நிலையத் தலைவர் எம்.பி.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழவுகளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, ஓட்டமாவடி பிரதேசசபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம.சி.அன்சார், ஓட்டமாவடி பிரதேசசபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .