2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

சிறுவர் பிரச்சினை தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 13 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், சிறுவர் ஊழியத்தை இல்லாமல் ஒழிப்போம் செயற்றிட்டத்தின் கீழ், சிறுவர்கள்  வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுத்து பாடசாலைக் கல்வியை பெறுவதில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்கள் கல்வி கற்க ஊக்கப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் இலங்கையில் உள்ள சட்டமுறைகள் அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

அரசாங்கம் தற்போது வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில்,  பாடசாலை செல்லும் சிறுவர்களை கண்டுபிடித்து அவர்களை பாடசாலைக்கு செல்லவைப்பதற்காக இணைந்து செயலாற்றவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு, வாகரை ஆகிய பிரதேசங்களில் அதிகளவான சிறுவர்கள் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும் இந்த பகுதிகளில்; கூடுதல் கவனம் செலுத்தவும் இங்கு அறிவுறுத்தப்பட்டது.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் திருமதி ஜே.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் சட்டத்தரணி எஸ்.கதிரவேற்பிள்ளை, தொழில் உத்தியோகத்தர் ஆ.கோகுலரஞ்சன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்த செயலமர்வில்; பொலிஸ் அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள்,  திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .