2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மாதாந்த புலமைப் பரிசில் திட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 13 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜம் இய்யத்துஷ்ஷபாப் நிறுவனம் மாதாந்தம் புலமைப் பரிசில் கொடுப்பனவை வழங்கி வருகின்றது.

காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலுள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார், ஜம் இய்யத்துஷ்ஷபாப் நிறுவனத்தின் இணைப்பாள் எம்.றிம்சான் உட்பட முக்கியஸ்த்தர்கள், அதன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 50 மாணவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. தலா ஒரு மாணவருக்கு மாதாந்தம் 3700 ரூபா வீதம் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இக்கொடுப்பனவு 18வயது வரைக்கும் வழங்கப்படுவதோடு நான்கு மாதத்துக்கான கொடுப்பனவு நேற்றைய தினம் வழங்கப்பட்டதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .