2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Super User   / 2012 ஜூன் 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


ஓட்டமாவடி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் கமநெகும, திவிநெகும திட்டங்கள் தொடர்பாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொங்ரீட் வீதி வேலைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லையென்றும் கொங்ரீட் வீதிகள் அமைக்கப்பட்டு ஓரிரு மாதங்களில் சேதமடைந்து விடுவதால் அவ் வீதியால் போக்குவரத்து செய்வது கஷ்டமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் முடிவடைந்ததும் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதி அமைச்சர்களும் அதிகாரிகளும் ஓட்டமாவடி எம்.கே.வீதியை சென்று பார்வையிட்டதுடன் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரியிடம்; திருத்த வேலைகளை உடனடியாக செய்யுமாரும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ஜவாஹிர் சாலி, எம்.எச்.எஸ்.இஸ்மாயில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்,  ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதேச செயலகப் பிரிவில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான கமநெகும திட்டத்தில் எட்டு திட்டத்திற்கு 8,000,000 ரூபாவும், திவிநெகும திட்டத்தில் மீன்பிடி, விவசாயம் மற்றும் சிறு கைத்தொழில் ஆகிய மூன்று திட்டத்திற்கு 321,390 ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் பதினெட்டு திட்டங்களுக்கு 1,155,000 ரூபாவும் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருபத்தைந்து திட்டத்திற்கு 3,145,000.00 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ஜவாஹிர் சாலி, எம்.எச்.எஸ்.இஸ்மாயில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சகாப்தீன்,  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .