2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

களுவன்கேணியில் நூலகம் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுவன்கேணி பிரதேச மக்களின் நன்மை கருதி ஒபர் அமைப்பால் நிர்மாணிக்கப்பட்ட நூலகம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பி.டி.ஏ.அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் சுமார் 11 இலட்சம் ரூபா செலவில் ஒபர் அமைப்பு மூலம் இந்த நூலகம் திறந்துவைக்கப்பட்டது.

களுவன்கேணி 02ஆம் வட்டார கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் டினேஸ்பாபு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உதயசிறிதர், ஏறாவூர்ப்பற்று தவிசாளர் வினோத்,ஒபர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சங்கீதா திவ்யராஜ்,மன்னர் இணைப்பாளர் தயாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 1300 குடும்பங்கள் கொண்ட இப்பிரதேசத்தில் கடந்த காலத்தில் பொது நூலகம் ஒன்று அமைத்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படாத நிலையில் ஒபர் அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்நூலம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான நூல்களையும் ஒபர் அமைப்பு வழங்கியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஒபர் அமைப்பின் பணிகளில் இது கட்டம் என இந்த அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சங்கீதா திவ்யராஜ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .