2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

ஜோர்டானில் வேலைவாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 20 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி ஜோர்டானில்  வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை தாண்டவன்வெளியில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி திருமலை வீதி, இலக்கம் 204இல் காணிக்கை மாதா ஆலயத்தின் முன்பாக இதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும்;.

மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் வேண்டுகோளுக்கமைய நடைபெறவுள்ள இவ்வேலைவாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம் தெரிவித்தார்.

இந்நேர்முகப் பரீட்சைக்கு கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டையுடன்; சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .