2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

சிறுவர் நிதியத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளர் மட்டு. விஜயம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சிறுவர் நிதியத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளர் கொத்பிறி, சிறுவர் நிதியம் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் செயற்படுத்தப்பட்டு வரும் இளைஞர் தகவல் மையங்களைப் பார்வையிட்டார்.

இன்று காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சிறுவர் நிதியத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளருடன், ஆசியாவுக்கான திட்ட முகாமையாளர் எவ்லி, இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் ஜெகநாதன், மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பேனாட் பிரகாஸ் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

இவர்கள், வவுணதீவின் புதுமண்டபத்தடியில் அமைந்துள்ள சண்முகா இளைஞர் கழகத்தின் கீழ் செயற்பட்டுவரும் இளைஞர் தகவல் மையத்தினைப் பார்வையிட்டு இளைஞர்களுடன் கடந்த கால எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தனர்.

அத்துடன், இருட்டுச் சோலை மடுவில் அனுசரணைத்திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோரையும் குழந்தைகளையும் சந்தித்து அவர்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அத்துடன், இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வவுணதீவு இளைஞர் யுவதிகளுக்காக நடத்தப்பட்டுவரும் அலங்காரத்தையல் நிலையத்தினையும் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .