2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

முதலை கடித்து குடும்பஸ்தர் பலி

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

வெருகல் கங்கையில் முதலை கடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதூர், கதிரவெளியை சேர்ந்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான  சிவநாதன் தர்மலிங்கம் (வயது -36) என்ற நபரே உயிரழந்தவராவார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வழமை போன்று  மறுகரையிலுள்ள சகோதரனை பார்த்து விட்டு வீடு திரும்பும் வழியில் கங்கையை நீந்தி கடந்துள்ளார்.

இதன்போது எதிரே வந்த முதலை கடித்து இழுத்து கங்கையின் ஆழமான பகுதியில் கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளது.
இதனை அறிந்த பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் நேற்று சனிக்கிழமை சடலத்தை மீட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .