2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களமடு ஆற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை சேர்ந்த 23 வயதான விநாயகமூர்த்தி கோவலன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக குறித்த ஆற்று பகுதியில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற கரடியனாறு பொலிஸார் சடலத்தை மீட்டு செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .