2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கிராம மக்களின் தேவைகளை கேட்டறியும் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மரப்பாலம், சின்னபுல்லுமலை, கோப்பாவெளி மற்றும் இராஜாபுரம்; கிராம மக்களின் தேவைகளை கேட்டறியும் கலந்துரையாடல் இராஜபுரம் விஸ்ணு ஆலய முன்றலில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இக்கிராமங்களைச் சேர்ந்த தலைவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இக்கிராமங்களின் உடனடித் தேவைகள் ஆராயப்பட்டன. இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அத்தியாவசியத் தேவையாக வீடுகள் மற்றும் குடிநீர் பிரச்சினை காணப்படுகின்றன. 

இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்ட கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், இதற்கான நடவடிக்கைகளை தான் உடனடியாக  மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .