2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

குளத்தில் நீராடிய இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

சிகிரியா பகுதியிலுள்ள குளமொன்றில் நண்பர்களுடன் நீராடிய  இளைஞர் ஒருவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு, சந்திவெளியைச் சேர்ந்த குணநாதன் அச்சுதன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவரது சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தம்புள்ளை  வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பொலிஸாரினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிகிரியாப் பகுதியில் தொழில் புரிவதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் இவர் அங்கு சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .