2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கிராண் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 02 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                             (ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கிராண் கமநல அமைப்பின் தலைவர் தேவன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது கிராண் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,

'கடந்த கால யுத்த சூழ்நிலையினால் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களாக கிராண் விவசாயிகள் உள்ளனர். அவர்களில் அனேகமானவர்கள் படுவான்கரை பிரதேசத்திலே தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது பாரிய அபிவிருத்தியை மட்டக்களப்பு மாவட்டம் சந்தித்துவரும் நிலையில் விவசாயிகளின் மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளேன்.

குறிப்பாக கிராண் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் கிராணில் இருந்து குடும்பி மலை வரையிலான வீதி பல கோடி ரூபா செலவில் காபட் இடப்படவுள்ளது.

அத்துடன் கிராண் விவசாயிகளின் பிரச்சினைகளை நோக்காக்கொண்டு சிறிய குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு அதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக புதிய சந்தைக்கட்டிடங்களை அமைக்கவும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.

  Comments - 0

  • iya Monday, 02 July 2012 04:56 AM

    தேர்தலுக்கு அள்ளிச்சொரியும் வார்த்தை யாலங்க‌ள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .