2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கடும் காற்று; அமைச்சர் எஸ்.பி உரையாற்றிய மேடை சரிந்தது

Super User   / 2012 ஜூலை 02 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.சுக்ரி, அ.அனுருத்தன், ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பலத்த காற்றுவீசியது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய சுகாதாரப் பிரிவுக்கான அடிக்கல்நாட்டும் வைபவத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பிதிஸாநாயக்க உரையாற்றிக்கொண்டிருந்தபோது கடும் காற்று வீசத் தொடங்கியதால் அமைச்சர் உடனடியாக மேடையிலிருந்து பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டார்.

அதன்பின் அதிதிகள் மற்றும் பிரமுகர்கள் மேடையிலிருந்து இறங்கும்போது மேடையும் சரிந்து விழுந்தது. எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை பிரதியமைச்சர் முரளிதரன் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

இதேவேளை வாழைச்சேனை, ஏறாவூர் முதலான பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. இதனால் சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.  காற்றில் பறந்துவந்த கூரைத்தகரங்கள் தாக்கியதால் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, வீசிய கடும் காற்று காரணமாக வாகரையின் மீள்குடியேற்ற பிரதேசங்களிலுள்ள சில வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வாழைச்சேனை, ஓட்டமாவடி,  கிராண், செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரை, மாங்கேணி பகுதியில் உள்ள பாடசாலைகளின் கூரைகள் கடும் காற்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறித் பகுதி மக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை மட்டக்களப்பு நகரின் திருமலை வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு மேல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் உடைந்ததனால் வாகன போக்குவரத்துக்கள் வேறு வீதி வழிகளில் மேற்கொள்ளப்பட்டன. இதேநேரம் கடும் காற்று காரணமாக ஏற்பட்ட மேலதிக சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
(படங்கள்: எம்.சுக்ரி)






  Comments - 0

  • ibnuaboo Monday, 02 July 2012 03:33 PM

    காற்றுக்கென்ன வேலி.

    Reply : 0       0

    nawas Tuesday, 03 July 2012 06:17 AM

    இது இறைவனின் சோதனை.

    Reply : 0       0

    mudhalvan9 Tuesday, 03 July 2012 07:54 AM

    நல்ல நேரம் அமைச்சர் தப்பினார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .