2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

போலி பட்டங்களை வழங்கி பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Super User   / 2012 ஜூலை 03 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

போலியான முறையில் முக்கிய பிரமுகர்களின் கையெழுத்துக்களை இட்டு பெறுமதியான பட்டங்ளை பல்வேறு அமைப்புகளின் பெயரில் வழங்கி இலட்சக்கணக்கில் பணம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்துள்ளதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.

காலியை சேர்ந்த குறித்த நபர்  பயணம் செய்த காரிலிருந்து சமஸ்த லங்கா சம்மான உபாதி சரசவிய – சமஸ்த லங்கா நெண குண பதனம என்ற அமைப்பின் பெயரில் அரச இலட்சினை பொறிக்கப்பட்ட 300 போலியான நற்சாட்சிப்பத்திரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு 'மங்களராம ரஜ மஹா விகாரையின் விகாராதிபதியும் மட்டக்களப்பு – அம்பாறை வட்ட பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமணரத்ன தேரரிடம் நற்சாட்சிப்பத்திரங்களில் கையெழுத்து பெற இன்று காலை வந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • ibnuaboo Tuesday, 03 July 2012 03:52 PM

    நம்மவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முன் மற்றவரகளின் கண்டுபிடிப்புகள் மண்டியிட வேண்டும் ஊழல் மோசடி யின் இப்புது வடிவம் நம்மவரால் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .