2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட சிரமதான நடவடிக்கைகள்

Kogilavani   / 2012 ஜூலை 05 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

சுகாதார அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரின் விசேட வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட சிரமதான நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி துசார தலைமையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேவின் வழிகாட்டலின் கீழ் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடுவவின் ஆலோசனையின் கீழ் பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இதன்போது பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வே.வேணிதரன், கல்லாறு ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த நடவடிக்கை களுவாஞ்சிகுடி பிரசேத்தின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
பாடசாலைகள், பொது இடங்கள், பொது மயானங்கள், வீதிகள் என்பவற்றில் சிரமதான் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .