2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஊறணி வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு

Super User   / 2012 ஜூலை 05 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்,கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு, ஊறணி பகுதியில் உள்ள வாவியில் இருந்து இன்று வியாழக்கிழமை இரவு பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் மீனவர்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு, ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த 52 வயதான லக்ஷ்மி என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வை;க்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .